இலங்கை செய்திகள்

விளக்கமறியலில் உள்ள ரிசாத்தை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிக்குமாறு கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்தக் கோரிக்கையை நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் வைத்து முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனுக்கு இதற்கான உரிமை இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, முதலில் ரிசாத் பதியுதீன் கோரிக்கை ஒன்றை முன்வைக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எனினும் இது தொடர்பான கோரிக்கை ஏற்கனவே ரிசாத் பதியுதீனால் முன்வைக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top