இலங்கை செய்திகள்

ரியாஜ் பதியுதீன் மனு நிராகரிக்கப்பட்டது

தாம் மீண்டும் கைது செய்யப்படுவதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அதனை நீதியரசர்களான மஹிந்த சமயவர்த்தன மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோர் நிராகரித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ரியாஜ் பதியுதீன் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டார்.

எனினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை என்பதை காரணம் காட்டி அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து அவரின் விடுதலைக்கு ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட பலரும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்தே தம்மை மீண்டும் கைது செய்யக்கூடாது என்று கோரி ரியாஜ் பதியுதீன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடை மனுத்தாக்கலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top