இலங்கை செய்திகள்

ஹம்பாந்தோட்டை மக்களுக்கு சீன மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்…!

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சீன மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமத்தின் அனுசரணையுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சீன மொழிப் பிரிவும், ஹம்பாந்தோட்டை மாவட்ட வர்த்தக சம்மேளனமும் இணைந்து இந்த சீன மொழி கற்பிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

ஹம்பாந்தோட்டை வர்த்தக சமூகத்திற்கு சீன மொழியை கற்றுக் கொடுப்பதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே மொழியை கற்பிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல்வேறு சீன அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனால் இவ்வாறு சீன மொழியை கற்றுக்கொள்வதனால் வர்த்தக நடவடிக்கைளை மேற்கொள்வது இலகுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு, தங்குமிட வசதிகள் மற்றும் போக்குவரத்து ஆகிய வசதிகளை செய்து கொடுத்து சீன மொழி கற்பிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top