இலங்கை செய்திகள்

உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மாகந்துரே மதுஷின் உடலம்! இன்று இறுதிச் சடங்கு

மாலிகாவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த மாகந்துரே மதுஷின் உடல் பமுனுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இறுதிச் சடங்குகள் மஹரகம – கொட்டிகமுவ மயானத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மாலிகாவத்த வீட்டுத் திட்டத்தில் 22 கிலோ ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்ததைத் தொடர்ந்து, கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகள் மகந்துரே மதுஷுடன் இன்று அதிகாலை சம்பவ இடத்திற்குச் சென்றிருந்தனர்.

இந்த போது பொலிஸாருக்கும், பாதாள உலககுழு உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாகந்துரே மதுஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகந்துரே மதுஷ், இலங்கையில் நடந்த கொலைகள், பாரியளவிலான ஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளி எனக் கூறப்படுகிறது.

துபாயில் தலைமறைவாகி இருந்த அவர், கடந்த ஆண்டு அந்நாட்டில் நடத்திய விருந்துபசாரம் ஒன்றில் போதைப் பொருட்களுடன் துபாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top