இலங்கை செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கைது!

நாட்டில் கொரோனா அச்சம் நிலவும் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளளனர்.

அந்தவகையில் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய 513 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் மினுவாங்கொட பகுதியிலேயே அதிகளவானோர் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டள்ளதோடு , வாகனங்கள் சிலவற்றும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொலிஸாரினால் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மேலும் 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 117 பேர் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்து குற்றச்சாட்டில் 61 பேரும் , கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்து குற்றச்சாட்டில் 29 பேருமாக மொத்தம் 252 பேர் மேல் மாகாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top