இலங்கை செய்திகள்

கொரோனா கொத்தணி குறித்து விசாரணை! சுகாதார அமைச்சர்

பிராண்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

செப்டம்பர் 22ம் திகதி இந்தியர்கள் யாரும் வரவில்லை என்றும், விமானத்தில் இருந்த 48 பயணிகளும் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 20 வரை தனிமைப்படுத்தப்பட்ட பணியை மேற்கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.

“இந்தியாவில் இருந்து வந்த விமானத்திற்கு வெளியுறவு அமைச்சக செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அவர்கள் இராணுவத்தின் மேற்பார்வையின் கீழ் கொஸ்கொடவில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட பணிக்கு உட்படுத்தப்பட்டனர்.

பின்னர் பிராந்திய மருத்துவ சுகாதார அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இரண்டு வார சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்” என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Most Popular

To Top