இலங்கை செய்திகள்

இலங்கைக்குள் கொரோனாவினால் பாதிக்கப்படும் முதியோர் எண்ணிக்கை குறைவு!

இலங்கைக்குள் கொரோனாவினால் பாதிக்கப்படும் முதியோர் எண்ணிக்கை குறைந்தளவில் உள்ளது.

இந்தநிலைமை மாறுமானால் தற்போதுள்ள மரண எண்ணிக்கையான 13இல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்திய கலாநிதி ஜயருவன் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார். கொரோனாவுக்கு எதிராக இன்னும் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை.

பீசீஆர் பரிசோதனைகள் மாத்திரமே கொரோனா வைரஸை கண்டுபிடிக்க வழியாக உள்ளன என்றும் ஜயருவன் குறிப்பிட்டார். இந்நிலையில் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.

கடந்த சில மாதங்களில் கொரோனா வைரஸ் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் அலட்சிப்போக்கு காரணமாகவே இன்று வைரஸின் தாக்கம் அதிகமாகியிருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்

Most Popular

To Top