இலங்கை செய்திகள்

மதுஷ் கொலை செய்யப்பட்டதில் எழுந்த புதிய சர்ச்சை

கொழும்பு குற்ற விசாரணை விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பிரபல போதைப் பொருள் வர்த்தகரான மாகந்துர மதுஷ் கொலை செயப்பட்டுள்ளார்.

எனினும் மதுஷ் உயிரிழக்கும் வரை போலி கடவுச்சீட்டு பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காட்டிற்கான ஆதாரம் மாத்திரமே கிடைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டிருந்த மதுஷ் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக விசாரிக்கப்பட்ட போதிலும் பாரிய போதைப் பொருள் வியாபாரம் மற்றும் கொலை தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றத்தில் உறுதி செய்ய கூடிய அளவு சாட்சிகள் பொலிஸாருக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சமகால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாமல் குமார என்பவரினால் மதுஷிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் இறுதியில் எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒன்றரை வருடங்கள் பொலிஸாரின் பொறுப்பில் இருந்த போதிலும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அவர் குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பில் இருந்த போது பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எனினும் அதன் மூலம் வழக்கு தாக்கல் செய்ய போதுமான அளவு சாட்சிகள் போதுமானதாக இருக்கவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எப்படியிருப்பினும் இந்த வாக்குமூலத்தில் அவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கமல் டி சில்வாவுககு சொந்தமான சுற்றுலா ஹோட்டல் குறித்து, நாட்டை விட்டு தப்பி சென்றவர்கள் தொடர்பிலும் தகவல் வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஆதாரங்கள் நிரூபிக்க முடியாத நிலையில் மாகந்துர மதுஷ் என்கவுண்டர் முறையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Most Popular

To Top