இலங்கை செய்திகள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னரே 15 ஆயிரம் பேருக்கு தெரியும்! திடுக்கிடும் தகவல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்த சஹ்ரான் ஹாசிம் திட்டமிருந்தார் என சுமார் 15 ஆயிரம் பேர் அறிந்திருந்தனர் என அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சாட்சியமளிக்கும் போதே அவர் இந்த விடயம் தொடர்பாகத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 11ம் திகதியாகும் போதே இந்தத் தாக்குதல் தொடர்பில் சுமார் 10 ஆயிரம் பேர் அறிந்திருந்தனர் என அவர் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தைப் பொறுப்புடன் கூறுகின்றீர்களா என ஆணைக்குழுவின் நீதிபதி இதன்போது வினவியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அவர், மேல் மாகாணத்திலுள்ள சுமார் 8 ஆயிரம் அதிகாரிகளுக்கு அறிவித்தார் என பொலிஸ் மா அதிபர் ஏற்கனவே ஆணைக்குழுவில் தெரிவித்தார் எனவும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடங்கலாக சுமார் 15 ஆயிரம் பேர் தாக்குதல் தொடர்பாக அறிந்திருந்தனர் எனவும் நிலந்த ஜயவர்தன கூறியுள்ளார்.

Most Popular

To Top