இலங்கை செய்திகள்

நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மட்டும் இதுவரை 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 120 பேரும் மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 2,342 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,805 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,335 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 21 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா 3,457பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அதேநேரம் வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 297 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top