இலங்கை செய்திகள்

கைக்குண்டுடன் மூவர் கைது

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம், கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 18.10.2020 திகதி ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக இரு தரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது மோட்டார் சைக்கிள் ஒன்றினை ஒரு சாரார் அபகரித்து சென்றுள்ளனர்.

இதன்போது பாதிக்கப்பட்டவர் நேற்றைய தினம் கைக்குண்டொன்றினை காட்டி மோட்டார் சைக்கிளை தரும்படி மிரட்டிய நிலையில், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி,பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டை வைத்திருந்த நபரை கைது செய்துள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Most Popular

To Top