இலங்கை செய்திகள்

கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர் எண்ணிக்கை 1,702 ஆக உயர்வு

கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 77 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 44 பேர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில்புரியும்  தொழிலாளர்கள் என கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கம்பாஹா மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,702 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 268 என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு வெளியே உள்ள தொழிற்சாலைகளில் இருந்து கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் எவரும் பதிவாகவில்லை.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்டறிய கம்பாஹா மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 25,971 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்  கம்பாஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறியுள்ளார்.

Most Popular

To Top