இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்திற்குள் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சபாநாயகரே பொறுப்பு – ஹக்கீம்

பாராளுமன்றத்திற்குள் எம்மில் எவரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் உங்களால் பொறுப்புக்கூற முடியுமா? அவ்வாறு ஏதும் நடந்தால் நீங்கள்தான் பொறுப்புக்கூற வேண்டும் என ரவூப் ஹக்கீம் சபாநாயகர் மஹிந்த யாப்பாவை எச்சரித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று சபை அமர்வுகளின் போது, சபைக்குள் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்த நிலையில் ஆளும் – எதிர் கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றது, 

இதன்போதே சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சாபாநயகர் கட்சி தலைவர் கூட்டத்தில் இது குறித்து பேசலாம் என்றார். 

எனினும் எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் கருத்தினை நகைச்சுவையாக எடுத்துக்கொண்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் கூச்சலிட்டு விமர்சனங்களை முன்வைத்தனர். 

Most Popular

To Top