இலங்கையில் அடுத்த கட்ட கொரோனா பரவல் நாடாளுமன்றத்தில் இருந்தே ஆரம்பிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அச்சம் வெளியிட்டுள்ளது.
எனவே 20ஆவது அரசியலமைப்பு திருத்த விவாதத்துக்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதி மக்களை சந்திக்கின்ற போது அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
எனவே அது நாடாளுமன்றத்தில் ஏனையவர்களுக்கு பரவும் ஆபத்தும் இருக்கிறது.
எனவே எதிர்வரும் வியாழக்கிழமை 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெறுவதற்கு முன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரஞ்சித மத்தும பண்டார கோரியுள்ளார்.
