இலங்கை செய்திகள்

ஐந்து பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் உடன் அமுல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் குளியாபிட்டிய உள்ளிட்ட ஐந்து பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குளியாபிட்டிய, நாரம்மல, பன்னல, கிரியுல்ல மற்றும் தம்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிக் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top