இலங்கை செய்திகள்

கொழும்பு மெனிங் சந்தையில் உணவகம் நடத்தியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கொழும்பு மெனிங் சந்தையில் ஹோட்டல் ஒன்றை நடத்திச் சென்றவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கந்தான பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

நேற்று ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

தொற்றுக்குள்ளான நபர் குறித்த ஹோட்டலின் உரிமையாளர் எனவும் அவர் அங்கு காசாளராகவும் செயற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தினசரி குறித்த ஹோட்டலில் 200 பேர் வரையில் உணவு பெற்றுக் கொள்வதற்கு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Most Popular

To Top