இலங்கை செய்திகள்

மின்விளக்கை இன்றிரவு அணைத்து 20ற்கு எதிர்ப்பை வெளியிடுங்கள்!இளையோர் அணி கோரிக்கை

20வது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று இரவு, வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து ஒளி விளக்கொன்றை ஏற்றுமாறு ஜனநாயகத்துக்கான ஒன்றிணைந்த இளையோர் அணி கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அந்த அமைப்பின் பிரதிநிதி அ.பெனிஸ்லஸ் துஷான் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் 20வது திருத்தத்திற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை 20வது மணி (இரவு 8) நேரத்தில் உங்கள் வீடுகளில் ஒரு விழிப்புணர்வுப் போராட்டத்தை நீங்கள் செய்ய வேண்டும்.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அது
சார்ந்த சட்டங்களைப் பின்பற்றி, குறித்த மணி நேரத்தில் மூன்று நிமிடங்களுக்கு உங்கள் வீட்டின் மின் விளக்குகளை அணைத்து இருளாக இருக்கும் காலப் பகுதியில் ஓர் ஒளி விளக்கினை
ஏற்றி உங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்துக் கொள்ள முடியும்-என்றார்.

Most Popular

To Top