இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை பஸ் நடத்துநருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிலாபம் – இரணவில கொரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவரை மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்க்கத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் அங்கு சிகிச்சை நிலையம் அமைக்கும் பணி நேற்று மாலைக்குள் நிறைவு செய்யப்படாத நிலையில் அந்தத் தீர்மானம் கைவிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாழ். மாவட்டத்தின் கொரோனா நோய் சிகிச்சை நிலையம் மருதங்கேணிப் பிரதேச வைத்தியசாலையில் அமைக்கப்படுகின்றது.
மருதங்கேணி பிரதேச மருத்துவமனை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு முன்பாக நேற்றுக் காலை முதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
