இலங்கை செய்திகள்

கொழும்பு – புறக்கோட்டையில் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி…!

புறக்கோட்டையில் நான்காம் குறுக்கு தெருவில் மொத்த வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

குறித்த வர்த்தக நி;லையத்தின் உரிமையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நோய் நிலைமை காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அதன்பின்னர் அவருடன் தொடர்புடையவர்களுக்கு கொழும்பு மாநகர சபையால் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அந்த வர்த்தக நிலையத்தின் 3 பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதன்காரணமாக அந்த வர்த்தக நிலையத்தின் 16 பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது

Most Popular

To Top