இலங்கை செய்திகள்

மத்துகம பிரதேசத்தில் கொரோனா பரவியது தொடர்பில் ஆய்வு

மத்துகம பிரதேச செயலகத்தின் மூன்று பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய ஒவிடிகல, பதுகம, பதுகம புதியகுடியேற்றம் ஆகிய பிரதேசங்களே தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியமைக்கான ஆரம்பம் சுகாதார பிரிவுகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் அநுராதபுரம் பிரதேசத்திற்கு யாத்திரைக்கு வந்த குழுவினருக்கு கொரோனா தொற்றியிருந்தமை இந்த பிரதேசங்களில் கொரோனா தொற்றக் காரணமாகியுள்ளதாக களுத்துறை மாவட்ட நிர்வாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இம்முறை உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் இருப்பின் அவர்களுக்கு எவ்வித தடையும் இல்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top