20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரான லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய கூட்டங்களை நடத்துவதை குறைக்க வேண்டும். அப்படி நடத்துவது அந்த வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டத்திட்டங்களை மீறும் நடவடிக்கையாகும்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமரும் ஆசனங்கள் அரசாங்கம் வெளியிட்டுள்ள விதிமுறைகளுக்கு முன்னுக்கு பின் முரணானது. கூட்டங்களை நடத்த தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலைமையில், நாடாளுமன்றத்தை கூட்டுவதும் சட்ட விதிகளுக்கு முரணானது. சட்டத்தை இயற்றும் இடத்தில் அந்த சட்டம் மீறப்படுமாயின் நாட்டுக்கு வழங்கும் முன்னுதாரணம் என்ன?.
இதனால், 20வது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
