இலங்கை செய்திகள்

மக்கள் பீதியடைய வேண்டாம்! யாழ். அரச அதிபர்

தனிமைப்படுத்தலில் இருந்தவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை”, என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் தொற்று நிலைமை குறித்து நேற்றிரவு அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் சொன்னவை வருமாறு:

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை பஸ்ஸின் நடத்துனருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண் பயணித்த பேருந்தின் சாரதி, நடத்துனர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டநிலையில்
பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே அவர் தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டமையால் சமூகத் தொற்று ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, இது தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனினும் பொதுமக்கள் சுகாதாரத் திணைக்களத்தினரின் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும்”- என்றார்.

Most Popular

To Top