இலங்கை செய்திகள்

ஆடைத்தொழிற்சாலையின் திருகோணமலை ஊழியர்களின் உறவினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திருகோணமலையை சேர்ந்த ஊழியர்களின் உறவினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சோதனை நடவடிக்கைகள் இன்றையதினம் திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனை கம்பஹா – மினுவாங்கொட ஆடைத்தொழில்சாலையில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பத்து உறவினர்களில் ஒன்பது உறவினர்களுக்கு திருகோணமலை – விஜயசேகரபுர பகுதியில் திருகோணமலை நகர பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.சையொழிபவன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு சமூகமளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Most Popular

To Top