இலங்கை செய்திகள்

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவிக்கு கொரோனா – ஏனைய மாணவர்களின் நிலை….

கம்பஹாவில் உள்ள பிரபலமான மகளிர் பாடசாலை ஒன்றின் பரீட்சை மையத்தில் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதி ஆகியுள்ளது.

அவர் தற்போது கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மாணவி பரீட்சை எழுதுவதற்காக ஐ.டி.எச். மருத்துவமனையில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம் கடந்த நாட்களில் குறித்த மாணவி பரீட்சை எழுதிய மண்டபத்தில் இருந்த மாணவர்களுக்கு பிரத்தியேக பரீட்சை மண்டபம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top