இலங்கை செய்திகள்

யாழ்.நல்லுாரில் ஆட்களற்ற வீடுகளுக்குள் புகுந்து தொடர் கொள்ளை..! 21 வயதான இருவர் கைது

யாழ்.நல்லுார் பகுதியில் பல வீடுகளில் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுவந்த இருவர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 15 மின் விசிறிகள், 2 நீர் பம்பிகள், எரிவாயு சிலின்டர்கள், றைஸ் குக்கர், உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நல்லுார் பகுதியை சேர்ந்த 21 வயதானவர்கள் எனவும் நேற்றய தினம் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

வீடுகளில் ஆட்களற்ற வீடுகளில் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுவந்தமை தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்திவந்த நிலையில்

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Most Popular

To Top