இலங்கை செய்திகள்

நேற்று 121 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் நேற்று மாத்திரம் மொத்தமாக 121 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த 121 கொரோனா தொற்றாளர்களில் 115 பேர் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் ஏனைய ஆறு பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவார்.

மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 2,014 ஆக உயர்வடைந்துள்ளதுடன் நாட்டின் மொத்த கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,475 ஆக காணப்படுகிறது.

இதேவேளை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு, 14 வெளிநாட்டினர் உட்பட 2,067 நோயாளிகள் தற்போது நாடு முழுவதும் உள்ள 17 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

இதற்கிடையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,395 ஆக பதிவாகியுள்ளதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 255 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

Most Popular

To Top