இலங்கை செய்திகள்

கொழும்பு குடிசைவாழ் மக்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுப்பு

கொழும்பு மாவட்ட மக்களை கொவிட்-19 வைரஸ் தொற்றின் பிடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக பல வேலைத்திட்டங்கள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்தில் குடிசைவாழ் மக்களின் இருப்பிடங்களுக்குச் சென்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பலநடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய பஸ் தரிப்பு நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளிலும் நபர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top