இலங்கை செய்திகள்

வீடு புகுந்து வயோதிபரை வாளால் வெட்டிய கும்பல்! புன்னாலைக்கட்டுவனில் அட்டகாசம்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் இந்த முதியவரின் வீட்டுக்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்ற நான்கு
பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை மேற்கொண்டு விட் டுத் தப்பிச் சென்றுள்ளது.

பலத்த காயத்திற்குள்ளான 62 வயதான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Popular

To Top