இலங்கை செய்திகள்

மலையகத்தில் துப்பாக்கி மீட்பு

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இங்குருகடுவ மொரட்டுவ கமயில் துப்பாக்கியும் ஒரு தொகை கோடாவும் ( கள்ளச்சாராயம்) மீட்கப்பட்டுள்ளன.

பசறை பொலிஸ் பொருப்பதிகாரி பாலித செனவிரத்ன அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை அடுத்து பொலிஸ்
பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில்
C.i சமிந்த தலைமையிலான குழுவினரான
PS 54239 சமன்,
PS 39315 நிரஞ்சன்,
PS 55792 ராஜபக்ஷ, ஆகியோர் இங்குருகடுவ மொரட்டுவகமயில் சந்தேக நபர் ஒருவரின் வீடொன்றை சுற்றி வளைத்தனர்.

இதன் போது வீட்டினுள் இருந்து துப்பாக்கி ஒன்றை (shotgun) கைப்பற்றியதோடு வீட்டுக்கு பின்புறமாக சோதனையிட்ட போது ஒரு தொகை கோடாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இத்தோடு 58 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவே இடம்பெற்றுள்ளது.

இன்றைய தினம் சனிக்கிழமை சந்தேக நபரை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Most Popular

To Top