இலங்கை செய்திகள்

கொவிட்-19 பரவல் காரணமாக நடைப்பாதை வியாபாரங்களுக்கு தடை!

தலவாக்கலை – லிந்துலை நகரசபைக்கு உட்பட்ட நகரங்களில் காணப்படும் வர்த்தக நிலையங்களுக்கு வெளிப்பிரதேசத்தில் இருந்து வருகை தரும் வர்த்தகர்களுக்கு கடைகளை வாடைகக்கோ , வியாபார நோக்கத்திற்காகவோ விடக்குடாதென லிந்துலை நகசபை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொவிட்-19 பரவல் காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழமைப்போல் வழங்க திட்டமிட்டிருந்த நடைப்பாதை வியாபார நடவடிக்கைகள்  இவ்வருடம் நிறுத்தப்படவுள்ளதாகவும் நகரபிதா தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்வருடம் தலவாக்கலை – லிந்துலை நகரங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எவ்வித நடைப்பாதை வியாபாரங்களையும் நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஏகமனதான தீர்வினை நகரசபை எடுத்துள்ளதாகவும் நகரபிதா அசோக் சேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top