இலங்கை செய்திகள்

யாழில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கோப்பாய் சந்தியில், டிப்பர் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவத்தில் 36 வயதுடைய கருனாரட்ணம் கருனானந்தன் எனும் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்றபோது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த குடும்பஸ்தர் உயர்ந்துள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது .

அதேவேளை விபத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்து.

Most Popular

To Top