இலங்கை செய்திகள்

பேருந்தில் ஏறிய கொரோனா நோயாளி! பாதிக்கப்பட்ட நடத்துனர் வெளியிட்ட தகவல்

கொரோனா தொற்றுக்குள்ளான தாதி ஒருவரினால் கொழும்பில் இருந்து மத்துகம நோக்கி பயணித்த பேருந்தின் நடத்துனர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முறை தொடர்பில் முதல் முறை ஊடகத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

தீபால் வீரவன்ஷ என்ற இந்த பேருந்தின் நடத்துடனரே இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

தினமும் தங்கள் பேருந்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தாதிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட குழுவினர் பயணிக்கின்றனர். இதன் காரணமாக நாங்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் மிகவும் அவதானமாக இருந்தோம்.

எப்படியிருப்பினும் எனக்கும் சாரதியினதும் உடலின் சில பகுதிகளில் ஏற்பட்ட வலி தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பீசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு சென்ற நான் பீசீஆர் பரிசோதனைகளை செய்துக் கொண்டேன் அதன் மூலம் கொரோனா தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டது.

நாட்டில் வாழும் மக்கள் தங்களுக்கு கொரோனா தொடர்பில் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

எனவே இவ்வாறான தொற்றில் இருந்தில் தப்பித்துக் கொள்வதற்கு பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Most Popular

To Top