இலங்கை செய்திகள்

வவுனியாவில் விசேட அதிரடிப்படையினர் திடீர் ரோந்து நடவடிக்கை

வவுனியா நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகளின் பிரதான வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கை விசேட அதிரடிப்படையினரால் நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினர் வவுனியா நகர் பகுதிகள் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளிலும் ரோந்தினை மேற்கொண்டிருந்ததுடன், பிரதான வீதி வழியாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதிக்கு சென்றிருந்தனர்.

அத்தோடு சந்தேகத்திற்கிடமான வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

மேலும் விசேட அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Most Popular

To Top