இலங்கை செய்திகள்

அரச தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான தகவல்

அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் எண்ணிக்கையை சுகாதாரத்துறையினர் நிர்ணயம் செய்வார்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பிராந்திய சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைகளுக்கு அமைய தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் எத்தனை பணியாளர்களை கடமையில் ஈடுபடுத்த முடியும் என்பது குறித்து நிர்ணயிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று நிலைமையினால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பணியிடங்களுக்கு வருகை தரும் பணியாளர்களின் உடல் வெப்ப நிலை கட்டாயமாக்க பரிசோதனை செய்யப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட ஏனைய சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டுமென மேலும் கூறப்பட்டுள்ளது.

Most Popular

To Top