கொரோனா வைரஸின் சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளிகள் ஏனைய தொற்றிகளின் தொடர்புகளுடனேயே தொற்றாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அதாவது தொற்று ஏற்பட்ட ஏதுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே இதனைக்கொண்டே சமூகப்பரவல் இன்னும் இல்லை என்ற முடிவுக்கு வரமுடிந்துள்ளது.
சமூக மட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோள் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நாட்டில் 21 மருத்துவமனைகள் செயற்படுகின்றன.
கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரே மருத்துவமனை ஐடிஎச் என்ற தொற்று நோய் மருத்துவமனையாகும்.
எனினும் இன்று நாட்டில் 21 மருத்துவமனைகள் கொரோனா வைரஸூக்கு பரிகாரம் மேற்கொள்ளும் மருத்துவமனைகளாக செயற்படுகின்றன.
சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு அவர்களின் வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனினும் அதனை செய்ய இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்று பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
