இலங்கை செய்திகள்

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் றிசார்ட்டை தேடி எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டுக்கு சென்றுள்ளதாக தகவல்

குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் சிலர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் றிசார்ட் பதியூதீனுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று நடந்துள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் சஜித் பிரேமதாசவின் வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

றிசார்ட் பதியூதீன், எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Popular

To Top