இலங்கை செய்திகள்

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் விவாத திகதி அறிவிப்பு

உத்தேச 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்வரும் 21ம் மற்றும் 22ம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட உள்ளது.

நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பிலான செயற்குழு இன்று கூடிய போது இந்த விடயம் குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முற்பகல் 10.00 மணி முதல் இரவு 7.30 வரையில் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட உள்ளது.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் விவாதம் நடாத்துவதற்கு நான்கு நாட்கள் தேவை என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நான்கு நாட்களிலும் கோப் குழு கூட உள்ளதாக அதன் தலைவர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்

Most Popular

To Top