இலங்கை செய்திகள்

அதிக ஆபத்துள்ள பகுதிகளுக்கு அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் – இராணுவ தளபதி

நாட்டில் எந்த பகுதியிலாவது கொரோனா வைரஸ் அதிக ஆபத்து இருந்தால், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தவிர்க்க முடியாமல் இதுபோன்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இராணுவ தளபதி தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டுப்பிடிக்கப்பட்டாலும் அது ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படலாம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு அதிக ஆபத்து உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் 22 பேர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களிலிருந்தும் , 46 பேர் ஆடைத் தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பை பேணியவர்களும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் மினுவங்கொடை, கம்பஹா மற்றும் காட்டுநாயக்க பகுதிகளில் வசிப்பவர்கள்.

அவர்களில் இருவர் மட்டுமே கொழும்பில் வசிப்பவர்கள், வத்தளை மற்றும் கந்தான பகுதிகளிலிருந்தும் நோயாளிகள் பதிவாகியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இன்றைய தினம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா தொற்றாளிகள் தொடர்பில் மேலும் 61பேர்
தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 3பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து கண்டறியப்பட்டனர்.

ஏனைய 58பேர் தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் கண்டறியப்பட்டதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்குள் மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 5305ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு அதி ஆபத்து வலயமாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கூடுதலாக அடுத்து கொழும்பு வலயம் முடக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Most Popular

To Top