இலங்கை செய்திகள்

நேற்று 74 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் நேற்றைய தினம் மொத்தமாக 74 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 5,244 ஆக உயர்வடைந்துள்ளது.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியோர் 46 பேர்,
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளோர் 22 பேர்,
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து நாடு திரும்பியோர் 03 பேர்
அது தவிர மேலும் 03 பேர்.

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப்பரவல் மூலம் இதுவரை 1,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 23 நபர்கள் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளமையினால், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 3,380 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் 1,845 கொவிட்-19 தொற்று சந்தேக நபர்கள் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top