இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி!முல்லைத்தீவில் சம்பவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாவத்தைப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் அதிகாரி வீதியால் வந்த உழவு இயந்திரம் ஒன்றை நிறுத்திய போது குறித்த உழவு இயந்திரம் நிறுத்த முற்பட்ட வேளையில் விபத்துக்குள்ளானது.

இதில் சிக்கிய குறித்த பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்

இந்த விபத்தில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 42 வயதுடைய போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Most Popular

To Top