இலங்கை செய்திகள்

மகளை புலமைப்பரிசில் பரீட்சைக்கு அழைத்துச் சென்ற தந்தைக்கு கொரோனா

கல்கிஸ்சை பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவியுடன் சென்றிருந்த அவரது தந்தை கொரோனா தொற்றாளர் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நபர் கல்கிஸ்சை இதுரு உயன பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளுக்கு துணிகளை விநியோகிக்கும் வர்த்தகர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நபர் வெலிகந்தையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அயல் வீடுகளில் உள்ள 12 குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Most Popular

To Top