இலங்கை செய்திகள்

எச்.என்.பி. தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா

கொழும்பு, டி.பி. ஜெயா மாவத்தையில் அமைந்துள்ள எச்.என்.பி. வங்கியின் தலைமை அலுவலகத்தின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது அலுவலகம் மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய ஊழியர்களுக்கான பி.சி.ஆர். சோதனைகள் முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மேலதிக நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின் கீழ் எடுக்கப்படும் என்றும் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

To Top