இலங்கை செய்திகள்

ரிசாட் பதியூதீன் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கக் கோரி முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிசாட் பதியூதீனை கைது செய்ய காவல்துறையினர் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய ரிசாட் பதியூதீனை கைது செய்ய தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய கணக்காளர் ஒருவரை காவல்துறையினர் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் சட்டத்தரணிகள் ஊடாக தாம் கைது செய்யப்படுவதனை தடுக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Most Popular

To Top