உலகின் முன்னணி சஞ்சிகையால் 2020ஆம் ஆண்டில் பயணம் செய்ய இரண்டாவது சிறந்த நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பயணங்கள் தொடர்பில் வெளியாகும் கான்டே நாஸ்ட் என்ற சஞ்சிகையால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இலங்கை இரண்டாவது இடத்திற்கு தேர்வாகியுள்ளது.
அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் 2020ஆம் ஆண்டில் பயணம் செய்ய சிறந்த நாடுகளில் இத்தாலிக்கு 94.05 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்திலும், இலங்கை 93.96 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்திலுள்ளன.
போர்த்துக்கல், ஜப்பான், கிரீஸ், தாய்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவை இப்பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன.
கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக இலங்கையில் தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சஞ்சிகையால் உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
