இலங்கை செய்திகள்

மினுவாங்கொட கொரோனா கொத்தணி தொடர்பில் வைத்தியர் ஜயருவன் பண்டாரவின் கருத்து

இலங்கையில் கொரோனா வைரஸ் இன்னமும் சமூக மயமாகவில்லை என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் புதிய கொத்தணியில் அடையாளம் காணப்பட்ட எந்த ஒரு நோயாளியும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை. இதனால் இந்த கொத்தணியில் ஒருவருக்கும் உயிர் ஆபத்து ஏற்படாத வகையில் தடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்.

அதேபோன்று இந்த நோயினை கட்டுப்படுத்துவதற்காக பொது மக்களின் ஆதரவு அவசியமாக உள்ளது.

பொது மக்கள் சுகாதார பழக்கவழக்கங்களை கடைப்பிடித்தால் இந்த கொத்தணியை கட்டுப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top