இலங்கை செய்திகள்

விவசாயிகளுக்கு நிவாரண விலை தொடர்பாக ஜனாதிபதி விசேட ஆலோசனை!

விவசாயிகளுக்கு அதிக லாபமும் நுகர்வோருக்கு நிவாரண விலையிலும் பொருட்கள் கிடைக்கப் பெறும் வகையில் சந்தையொன்று உருவாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி தமது பொருட்களை விற்பனை செய்யும் நிலைமையை ஏற்படுத்துவதன் ஊடாக இதனை சாத்தியப்படுத்த முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

வாழ்கைச்செலவு குழு இன்று கூடிய போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அத்தியவசியப் பொருட்களை பற்றாக்குறையின்றி மக்களிடம் சேர்ப்பது குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 50 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் புதிதாக தெங்கு செய்கையை ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதி பணித்துள்ளார்.

பழங்கள்,மரக்கறி வகைகள் மற்றும் முட்டை ஆகியவற்றை நுகர்வோர் தேவைக்கு ஏற்ப பிரதேச மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக இதன் போது ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை கட்டியெழுப்பும் வகையில் வீட்டுத் தோட்டம் மற்றும் கோழிவளர்ப்பினை ஊக்குவிப்பதற்கான திட்டங்களுக்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் நெற்கொள்வனவினை மேற்கொள்வதற்கான திட்டங்களை தயாரிப்பதன் அவசியத்தை இதன் போது ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Most Popular

To Top