இலங்கை செய்திகள்

டிக்கோயா தோட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தை நேரில் சென்று பார்வையிட்ட ஜீவன் தொண்டமான்

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை தொழிற்சாலைபிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளதுடன் அவர்களுக்கான நிவாரணம் குறித்தும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை தொழிற்சாலைபிரிவு தோட்டத்தில் நேற்றைய தினம் பெய்த காற்றுடன் கூடிய மழை காரணமாக பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் முன்று வீடுகள் முற்றாக சேதமடைந்தது.

இதனைக் கேள்வியுற்ற அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேரடியாக களத்திற்கு விஜயம் செய்து நேரில் பார்வையிட்டார். இதன்போது மூன்று  வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது.

பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும்  தேவையான உதவிகளையும் மற்றும்  குடியிருப்புகளையும் மீள்புனரமைக்குமாறு  பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகளுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் பணிப்புரை விடுத்தார். 

அத்தோடு இந்த அனர்த்தத்தின் போது பத்தனை கல்வியற் கல்லூரி மாணவி ஒருவர் பாதிக்கப்பட்டு கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியை அமைச்சர் வைத்திய சாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார். 

இதன்போது பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் முன்னாள் தலைவர் பாரத் அருள்சாமி மற்றும் நோர்வூட் பிரதேச சபைத்தலைவர் குழந்தைவேல் ரவி, அத்தோடு  பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உட்பட பலர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Most Popular

To Top