இலங்கை செய்திகள்

யாழ்.மாவட்டம் இப்போதும் ஆபத்தில் உள்ளது..! 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்..

யாழ்.மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.

மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் கூட அபாயமான நிலை காணப்படுகின்றது.

அனைவரும் கவனமாக செயற்பட வேண்டும், யாழ் மாவட்டத்தில் 501 குடும்பங்களை சேர்ந்த 1098 நபர்கள் சுயதனிமைப்படுத்தலுக்குள்ளாகி யிருக்கிறார்கள்.

கட்டாயத்தனிமைப்படுத்தலில் இருந்தவர்களின் எண்ணிக்கை 28 இருந்து தற்போது 18 ஆக குறைவடைந்துள்ளது. PCR பரிசோதனையின் பின்னர்

தொற்று இனங்காணப்படாதவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.ஒருவருக்கு மாத்திரமே யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இருந்தபோதிலும் யாழ்.மாவட்டத்தினுடைய பாதுகாப்பை உறுதிபடுத்துவதை முன்னிட்டு எடுக்கப்படுகின்ற முன்னேற்பாட்டு நடவடிக்கைகளுக்கு அனைவரும் இணங்கி செயற்பட்டு

இந்த கொரோணா தடுப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.அனைவரும் சுகாதார வழிகாட்டல்களையும் பின்பற்றி கட்டாயமாக செயற்படுத்த வேண்டும் நீண்ட தூர போக்குவரத்தில் ஈடுபடுவோர்

தங்களைப் பற்றிய விவரங்களை சுகாதார பிரிவினருக்கு கட்டாயமாக தெரியப்படுத்த வேண்டும் . தேவைப்படுமாயின் அவர்களுக்குரிய PCR பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வார்கள்

எனவே அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

Most Popular

To Top