மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதை தெரிவித்தார். இதன்படி 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதில் ஐவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களாவர். மேலும் 108 பேர் அவர்களுடன் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயாளிகளில் ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ளனர், மற்ற 108 பேர் அவர்களது கூட்டாளிகள்.இன்று வரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 130 ஆகவும், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1721 ஆகவும் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
