இலங்கை செய்திகள்

நாட்டை முடக்க வேண்டிய அவசியமில்லை

முழு அளவில் நாட்டை முடக்க வேண்டிய அவசியமில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் டொக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு பூச்சியம் தசம் மூன்று ஐந்து வீதமானவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் இதில் தொற்றாளிகளுடன் தொடர்பு பேணியவர்களும் பொதுவாக பரிசோதனை நடத்தப்பட்ட போது கண்டறியப்பட்டவர்களும் இதில் அடங்குகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முடக்க நிலையை அறிவிப்பது குறித்து சுகாதார அமைச்சு, தொற்று நோயில் பிரிவு, கொரோனா ஒழிப்பு விசேட படையணி மற்றும் கொழும்பு மாநகரசபை என்பன கூட்டாக இணைந்து கலந்தாலோசித்து முடக்க நிலைமை குறித்து தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைக்கு அவ்வாறு முடக்க நிலையை ஏற்படுத்த வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறையில் தமது 32 ஆண்டுகள் அனுபவத்தின் ஊடாக இந்த விடயத்தை குறிப்பிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

Most Popular

To Top